--- --:--:-- --

பசுவை பலி கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு..!

3

பசுவை பலி கொடுத்ததாக திண்டுக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

 

காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன் என்பவர் அதற்கான வாடகையை செலுத்தி வந்துள்ளார். அதற்குப் பிறகு மணிகண்டன் முறையாக வாடகை கொடுக்கவில்லை என கட்டடத்தின் உரிமையாளர் ராஜாமுகமது கூறியுள்ளார்.

 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வாடகைக்கு விட்ட கட்டிடத்தில் மாட்டை பலியிட்டு புதைத்துள்ளதாக ராஜாமுகமது புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் காங்கிரஸ் நிர்வாகி மீது மிருக வதை தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை மணிகண்டன் மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டை சிலர் தன் மேல் வைக்கின்றனர் என குற்றம் சாட்டுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon