மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய கோபால் இத்தாலியா கைது..!
பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் கோபால் நேரில் விளக்கம் அளித்தார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக எழுத்து வாயிலாக அவர் அளித்த விளக்கமும் நேரில் அவர் அளித்த விளக்கமும் மாறுபட்டதாக இருந்ததாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார். மேலும் தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கோபால் இத்தாலியாவை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோபால் இத்தாலியா கைது செய்யப்பட்டது குஜராத்தில் உள்ள படேல் சமூகத்தினர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





