தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 14-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





