நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு மிரட்டல்..!
நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் யூடியூபர் சூர்யாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ராமாபுரம் அருகே வசித்து வரும் பிரபாகர் என்பவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யா என்பவர் நடிகை பத்மபிரியாவை வைத்து பாரதியார் பாடல் ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடிகை பத்மப்ரியா நம்பரை கேட்டு சூர்யா பிரபாகரனை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கடந்த 11ஆம் தேதி பிரபாகரன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகை பத்மபிரியாவிடம் போலீசார் விசாரித்தால் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என கூறி வீடியோவை வெளியிட்ட சூர்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





