--- --:--:-- --

பள்ளியில் மாணவனை கடித்த பாம்பு..!

9

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் கிருஷ்ணன் பள்ளி வளாகத்தின் உள்ளே உள்ள கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்பொழுது விஷப்பாம்பு ஒன்று கிருஷ்ணனின் காலில் கடித்துள்ளது.

 

இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் கிருஷ்ணனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon