பெற்றோர் முன்னிலையில் தாக்கி கொண்ட பள்ளி மாணவிகள்..!
புதுச்சேரியில் இரு வேறு அரசு பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் இயங்கும் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் அந்த பள்ளி மாணவிகள் குருசிகுப்பம் பகுதியில் இயங்கும் என்சிசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக படிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பெற்றோர்கள் முன்னிலையிலேயே இரு பள்ளி மாணவிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்த நிலையில் பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





