நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி..!
இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களுக்கு கேரளா அமைச்சர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் மலையடிவாரத்தில் இருந்தவர்கள் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 5 உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 5 பேரின் உடல்களுக்கும் கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





