இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி..!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.
அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியது. விபத்தில் படுகாயமடைந்த முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





