பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து விலகல்..!
காயம் காரணமாக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து விலகுகிறார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 21ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த நிலையில் காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சிந்துவிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





