--- --:--:-- --

கண்களை மட்டும் கடிப்பதாக கூறப்படும் வினோத எறும்புகள்..!

1

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கண்களை மட்டும் கடிப்பதாக கூறப்படும் வினோத எறும்புகளால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பரந்து வரை பகுதியின் நடுவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை எறும்புகள் தென்பட்டதாக கூறப்படுகிறது.

 

இது நாளடைவில் பல்கிப் பெருகி அந்த மலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. மனித உடலில் பல்வேறு கொப்பளங்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. விலங்குகள் மீது ஏறி இறங்குதல் ஆகியவற்றில் கண்களில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இதுவரை இது போன்ற எறும்புகளை கண்டதில்லை என்றும் வேகமாக அதிகரித்து வரும் புதுவகை எறும்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon