--- --:--:-- --

போலி நகைகளை வைத்து நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் லட்சக்கணக்கில் மோசடி..!

6

கோவையில் போலி நகைகளை வைத்து நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் லட்சக்கணக்கில் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி நடைபெற்றது.

 

அப்போது லாக்கரில் போலி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது 592 நகைகளை 25 பொட்டலங்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்தது போன்று இருபத்தி ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

 

இதை மட்டுமின்றி அடகு வைக்கப்பட்ட உண்மையான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மதிப்பு சுமார் 14 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில் நிதி நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon