செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூலாங்குறிச்சி அருகில் உள்ள செல்போன் டவரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார் இறப்பதற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





