கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 7 பேர் கைது..!
திருப்பூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் காலனியை சேர்ந்த கோபாலு, சுசிலா தம்பதியினர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் சுசிலா பணியாற்றி வந்த பனியன் கம்பனியின் மேலாளர் மாரிஸ் என்பவருடன் சசிகலாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளதொடர்புக்கு கணவன் இடைஞ்சலாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கடந்த மே மாதம் கோபாலனை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




