--- --:--:-- --

ஹெலிகாப்டர் மீது மோதிய ஆம்புலன்ஸ்..!

8

மெரிக்காவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் வசிக்கும் இடத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப்பகுதியில் தரையிறங்க முற்பட்ட ஹெலிகாப்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon