ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்த சோகம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக ஐந்து குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்துள்ளது. திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த தம்பதிக்கு ஒரே சமயத்தில் 5 குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்தின் போது குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் இருந்தாலும் தாய் நலமுடன் இருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் வழியில் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை ஜெய்ப்பூர் மருத்துவமனையை அடைந்த பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




