திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன் நகர் கருனாகரபுரியை சேர்ந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் தாமோதரன் என்பவர் சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்து சென்று சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால் , சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் M.S. முத்துசாமி . இ.கா.ப ,உத்தரவின்பேரிலும் , திருப்பூர் மாநகரம் , வடக்கு மாவட்ட துணை ஆணையர் .அபினவ் குமார் , இ.கா.ப , அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து தாமோதரன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் .





