--- --:--:-- --

தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை இல்லை..உரிமைப் போராட்டம்..!

7

மிழ்நாடு என்பது வெறும் வார்த்தை இல்லை என்றும், ரத்தமும் சதையும் கொண்ட உரிமைப் போராட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு காணொளி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் விழாவில் காணொளி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என பெயர் சூட்ட முடிந்தது என கூறினார்.

 

தமிழகத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது திமுகவின் சாதனை என்று முதலமைச்சர் தெரிவித்தார். தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல என்றும் ரத்தமும் சதையும் கொண்ட உரிமைப்போராட்டம் எனவும் தெரிவித்தார்.

 

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவது பெருமைக்குரியது என்றும் 1967ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அண்ணாதுரை தமிழ்நாடு வாழ்க என முழங்கிய நாள் தமிழ் திருநாள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்வது தமிழினம் என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

Right Menu Icon