ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் மீட்பு..!
டெல்லியில் ஜாப் அரபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 40 வயதான கணவர் தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




