மேட்டூர் அணையில் இன்று நீர் திறப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பதை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் 40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் குறித்த காலமான ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்பாக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்று முதல் 110 நாள்களுக்குள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நீர்வள ஆதார துறை அதிகாரிகள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




