நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
நீலகிரியில் விடாது கனமழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கூடலூரில் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மரங்கள் தடுப்புச் சுவர்கள்களில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




