பத்மஸ்ரீ விருது பெற்ற 96 வயது பாட்டி!
96 வயதான பாட்டி ஒருவர் நேற்று பத்மஸ்ரீ விருது பெற்ற போது, அரங்கமே அதிர்ந்தது. பீமவ்வா தொட்டபாலப்பா ஷில்லேக்யதாரா என்பவர், கர்நாடகாவில் பிரபலமான, தோல் பொம்மை நாடகத்தில் கடந்த 70 வருடமாக ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை அரங்கேற்றி வருகிறார்.
நடக்கவும் சிரமப்பட்ட இவருக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்க, அரங்கத்தில் இருந்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியை, கைத்தட்டி வெளிப்படுத்தினர்.





