சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெருசலில் சிக்கி ஏழு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்தவுடன் ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேற முயன்றதால் நெரிசலும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டுள்ளது.





