--- --:--:-- --

கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் 3 லட்சம் மோசடி..!

5

சென்னையில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக டெல்லியை சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 பேருக்கு செய்யப்பட்டனர்.

 

மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு புகார் மனு அளித்தார்.

 

அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் சவுத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி ஆண்டுக்கு ஒரு சதவீதம் வட்டியில் கடன் தருவதாக கூறியதை நம்பி 3 லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

 

புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். செல்போனின் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர்.

 

Right Menu Icon