--- --:--:-- --

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு..!

1

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் உயிரிழந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பி அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று காலை மேய்ச்சலுக்காக 5 மாடுகள் அந்த பகுதியை சுற்றி வந்துள்ளது.

 

அந்த மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து 5 மாடுகள் உயிரிழந்துள்ளது. இதில் மூன்று பசு மாடுகளும், 2 கன்று குட்டிகளும் உயிரிழந்துள்ளது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இருதரப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருக்கும் மாடுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர்.

Right Menu Icon