தற்கொலைக்கு அனுமதி கோரி கடன் வாங்கியவர் மனு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடன் பெற்ற குடும்பத்தினரை கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி பாதிக்கப்பட்ட பெண் கோட்டாட்சியர் காலில் விழுந்து மன்றாடிள்ளார்.
கோவில்பட்டி அன்னைதெரசா நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மருத்துவ செலவிற்காக முருகேசன் பாண்டியன் என்பவரிடம் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். அந்த கடனை அடைக்க சுப்புராஜ், அவரது மனைவி மற்றும் வேறு சில நபர்களிடம் கடன் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடனை அடைப்பதற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். சுப்பராஜுக்கு அங்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதால் அவரது குடும்பம் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.






