தக்காளி மற்றும் முட்டையின் மேல் அமர்ந்து யோகாசனம் செய்யும் 4 வயது சிறுவன்..!
திருவண்ணாமலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி 4 வயது சிறுவன் தக்காளி மேல் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மீது அமர்ந்து ஆசனம் செய்து அசத்தினார். தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரும்பு மேசை மீது தக்காளி பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு அதன்மேல் 30 முட்டைகள் உடனான டிரே வைக்கப்பட்டிருந்தது.
யூகேஜி பையனும், நான்கு வயது தர்ஷன் இதன் மீது அமர்ந்து பத்மாசன, யோக முத்ரா ஆசனம், தாடாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை முட்டை உடையாமல் செய்து காட்டி அசத்தினார்.






