--- --:--:-- --

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி

Sui-644x483

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி

 

சேலம் மாவட்டத்தில் சென்னையை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் தற்கொலை முயற்சி இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதி.

கடன் தொல்லை காரணமாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா மகள் ஆர்த்தி மற்றும் மற்றொரு மகள் ஆசிகா ஆகியோருடன் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இன்று காலை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது மூன்று நபர்கள் உயிர் இந்த நிலையில் ஆர்த்தி என்பவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக் கண்டு ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் 3 பேரின் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon