--- --:--:-- --

வாய் கிழியப் பேசும் முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார்?

3

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலைகள் நடந்துவருகிறது எனவும், குற்றவாளிகளுக்குத் தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து, சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்; சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

 

வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon