தங்கம் வாங்கலாமா – வேண்டாமா?
அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் நேற்று மட்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,815க்கும், சவரனுக்கு ரூ. 840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,10,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 11,400க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




