--- --:--:-- --

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!

3

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,680க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளாதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,775க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,315க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon