கொள்ளையைத் தடுக்க நகைக்கடைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – காவல் ஆணையர் ராஜேந்திரன்
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், யூடியூப் காணொளிகளைப் பார்த்து கொள்ளைக்குத் திட்டமிட்டாரா அல்லது அவற்றைப் பார்த்து கொள்ளையில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிஷாந்தைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க நகைக்கடைகளைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




