--- --:--:-- --

ராமநாதபுரம் ஐந்திணை பூங்காவின் சிறப்புகள்!

4

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டத்தில் உள்ள அச்சடிபிரம்பு என்ற கிராமத்தில் மாவட்ட தோட்டைக்கலைத்துறையின் சார்பில் ஐந்திணை பாலைப்பூங்கா அமைக்கப்பட்டு 2015-ம் ஆண்டில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அச்சடிபிரம்பு கிராமத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் பசுமை நிறைந்த வகையில் பூஞ்சோலைகள், மரங்கள், குழந்தைகளை கவரும் வகையிலான விளையாட்டு பொருட்கள், புல்வெளிகள், மலர் செடிகள், குட்டைகள், ஓய்வெடுக்கும் நிழற்குடை என பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கிச் செல்லும் பூங்காவாக ரூ.7 கோடி செலவில் ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

 

இத்தகைய பல்வேறு வசதிகளுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களை கொண்டாடி மகிழ ஏற்ற இடமாக ஐந்திணை பூங்கா உள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வந்து சுற்றி பார்த்து செல்கின்றனர். புகைப்படங்கள் எடுக்க ஏற்ற இடமாக உள்ளதால் குழந்தைகளின் பிறந்தநாள் மற்றும் திருமணம் புகைப்படங்கள் இங்கு வந்து எடுத்துச் செல்கின்றனர்.

 

இங்கு பெரியவர்களுக்கு ரூ.30-ம், சிறியவர்களுக்கு ரூ.15-ம், பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.20-ம், கேமராக்கள் மூலம் புகைப்படங்கள் எடுக்க ரூ.100 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

பொதுமக்கள் ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறையின் மூலம் நடத்தப்படுவது இந்த பூங்காவின் கூடுதல் சிறப்பாகும். ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் இந்த பூங்கா அமைந்துள்ளது. பேருந்து மூலமாக ராமநாதபுரத்தில் இருந்து பயணம் செய்து செல்லலாம், சொந்த வாகனங்கள் மூலம் செல்லலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களை தங்களுடைய குடும்பத்துடன் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மகிழுங்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon