ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் பார்க்க வந்த தாய் சங்கீதா!
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தை பார்க்க தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷா ஆகியோர் கமலா தியேட்டருக்கு வருகை புரிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமன் இசையமைத்துள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குநராக ஜேசன் சஞ்சய்க்கு சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தன் மகனின் படத்தை பார்க்க தாய் சங்கீதா, தங்கை திவ்யா ஷாஷா சென்னையில் உள்ள கமலா திரையரங்குக்கு வருகை புரிந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





