கண்ணியமாக பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுங்கள் – அமைச்சர் ரமேஷ்
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், அவையின் மூத்தவர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதை எல்லாம் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராக வந்திருக்கும் நாங்கள் கற்றுக் கொள்கிறோம்.
அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. கண்ணியம் குறித்து ஓ.பி.எஸ் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது போன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் வரும் போது எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் கண்ணியத்தை சொல்லிக் கொடுப்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




