ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓ.பி.எஸ் எழுந்து நிற்பார் – அமைச்சர் ஆனந்த் பேச்சு
பேரவை தலைவர் வரும் போது கட்சி வித்தியாசமின்றி அனைவரும் எழுந்து நிற்பது மரபு. புதிய மரபாக முதல்வர் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் வரும் போதும் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமா என்பது குறித்து பேரவை தலைவரின் விளக்கம் கேட்கிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கேட்டார்.
அப்போது அமைச்சர் ஆனந்த், “அம்மா முதல்வராக இருந்தபோது அண்ணன் ஓ.பி.எஸ் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார். அதை இந்த தமிழகமே அறியும்” என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




