ரூ.225 கோடி மதிப்பில் கடலோர மேலாண்மை திட்டம்..!
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கடல் அரிப்பு அபாயத்தை தடுப்பதற்கு சுமார் ரூபாய் 225 கோடி மதிப்பீட்டில் கடலோர மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக வருவாய் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில் பல இடங்களில் கடல் அரிப்பு பெரும் சவாலாக உள்ளது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் 1990 முதல் 2022 வரையில் 32 ஆண்டுகளில் மாநிலத்தில் 39 சதவீதக் கடற்கரை பல்வேறு அளவிலான கடலரிப்பை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதில் மயிலாடுதுறை, செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் மிக அதிகளவு கடலரிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆய்வில் திருவள்ளுர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகம் பாதிக்ககூடிய 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு இயற்கை சார்ந்த பொறியியல் முறையில் தீர்வு காண்பதற்கு கடலோர மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தற்கு 225.15 கோடி மதிப்பிட்டில் முன்மொழிவு செய்யப்பட்டு அரசின் பரிசிலீனையில் உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




