--- --:--:-- --

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

2

மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது.கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.5000க்கும் மேல் உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது.

 

இதையடுத்து வார தொடக்கமான நேற்று ( மே 26) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,780க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,360க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon