--- --:--:-- --

த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெறுமா? திருமா பதில்..!

7

ன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், த.வெ.கவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த மே 8 ஆம் தேதி கூடிய விசிக உயர்நிலைக் கூட்டத்தில், பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றார்கள். இறுதியாக தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். மறுநாள் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சரவையில் இடம்பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு தர முடிவெடுத்தோம். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வேளச்சேரிக்கு வருகை தந்த விஜய், அவரது விருப்பத்தை தெரிவித்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்துள்ளார். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவை அறிவிப்போம் என்றார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon