சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாட்டில் சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் பதவியிலிருந்து அதுல்ய மிஸ்ரா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், அப்பதவிக்கு சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரதா சாகு வகித்து வந்த கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக கே.சு.பழனிசாமி பணியமர்த்தப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கிரண் குராலாவும், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக சு.மலர்விழியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த கோபால சுந்தரராஜ் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் தலைவராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பனோத் ம்ருகேந்தர் லால் டிஎன்பிஎஸ்சி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




