--- --:--:-- --

பியூஷ் கோயலை மீண்டும் சந்திக்கும் ஈபிஎஸ்?

4

தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் கடந்த 23-ஆம் தேதி ஈபிஎஸ்-ஐ சந்தித்து முதற்கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற பட்டியலை அதிமுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக ஜனவரி 4-ஆம் தேதி பியூஷ் கோயல் மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளார். ஜனவரி 4 மற்றும் 5 என இரு நாள்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அவர், பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

முதற்கட்ட ஆலோசனையின் போது பாஜகவுக்கு 23 இடங்களை ஒதுக்கலாம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமியுடனான இரண்டாவது கட்ட சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் பியூஷ் கோயல் சந்தித்து கூட்டணி பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியையும் பியூஷ் கோயல் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon