--- --:--:-- --

புத்தாண்டு பரிசாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!

3

மிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

 

இதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது. மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினோம். ஆனால், தற்போது வாக்கு செலுத்தும் வயதுவந்தோருக்கு லேப்டாப் வழங்க போகிறார்கள். இதன் மூலம், 10 லட்சம் வாக்குகளை பெற திட்டம்” என பேசியிருந்தார்.

 

இதற்கு பதில் கொடுத்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார்.

 

கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.

 

அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon