காற்றழுத்த தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களின் பாதுகாப்புக் கருதி, கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தூத்துக்குடியிலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 272 விசைப் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தடையால் காரைக்கால் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீனவர்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




