எடப்பாடி பழனிசாமி பொய்களைப் பரப்பி வருகிறார் – மு.க.ஸ்டாலின்
அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களை பரப்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது எனவும் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது கழக அரசு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான்காண்டு கால ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் என்றும், முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய பாஜக அரசு வெளியிட மறுப்பதுடன், ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்ப்பதாகவும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக-வோ அடங்கி ஒடுங்கி பாஜக-வுக்கு அடிமைச் சேவகம் செய்வதாகவும் சாடியுள்ளார்.
அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் ,சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களை பரப்பி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடம் நோக்கி வரும் 7ஆம் தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் திமுகவினர் கடலெனத் திரள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




