--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை அலர்ட்..!

1

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில் மிகத் தீவிரமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமாகவும் பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருமயம் (புதுக்கோட்டை) 12 சென்டிமீட்டரும், குடிமியான்மலை, காரையூர் (புதுக்கோட்டை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. புதுவை வறண்ட வானிலையுடன் இருந்த நிலையில், காரைக்காலில் லேசான மழை பதிவானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon