--- --:--:-- --

கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!

9

துரவாயில் தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் மதுரவாயில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

 

இவர் கல்லூரி செல்வதற்காக தனது காரில் நண்பர்கள் மூன்று பேரை ஏற்றுக்கொண்டு மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சீறிப்பாய்ந்து.

 

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கினாலும் மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த மதுரவாயில் போக்குவரத்து போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய காரை மீட்டு விசாரணை நடத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon