பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை: ஸ்டாலின்

த்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? என கேள்வி எழுப்பிய அவர், எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சி உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும் நிதி அறிவிக்கப்படும் என்றால், இது ‘மத்திய பட்ஜெட்’ தானா என்று சாடியுள்ளார்.