சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: வைகோ
பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிதும் பொறுப்பின்றி ஆணவமாகவும், அநாகரிகமாகவும் சீமான் பேசி வருகிறார்.
அவரது பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனையை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




