தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு போன இளைஞர் மாயம்..!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் விக்ரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு சென்ற தனது மகன் மேகநாதன் வீடு திரும்பவில்லை என்றும் அவனை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது ஆஜரான அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் தேடும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். காவல்துறை வாதங்களை கேட்டப்பின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





