--- --:--:-- --

போலீஸ் தாக்குதலில் காயம்..விவசாயிகள் மீண்டும் பேரணி..!

2

வரும் 14ஆம் தேதி டெல்லி நோக்கி மீண்டும் பேரணியில் ஈடுபட்டுள்ளதாக பஞ்சாப் விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் பயனர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர்.

 

அப்பொழுது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை தாக்குதல் நடத்தியதில் சில விவசாயிகள் காயமடைந்ததால் போராட்டத்தை ஒரு நாள் நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். பின்னர் கடந்த 8ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

 

ஆனால் ஷம்பு எல்லைப் பகுதியில் தடுப்புகளை அமைத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தியதில் விவசாயிகள் ஒன்பது பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பஞ்சாப் விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon