--- --:--:-- --

வங்க கடலில் நிலவில் வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

1

கனமழை எச்சரிக்கையை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

 

இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு பருவ மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காவிரி படுகை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனமழை எச்சரிக்கையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon